பிசாசு 2 திரைப்படத்தில் நிர்வாண காட்சிகள்? விளக்கம் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா!

முதலில் ஸ்கிரிப்டில் ஒரு காட்சி இருந்தது உண்மை. ஆனால் ஷூட்டிங்கில் இருக்கும்போதே மிஸ்கின் சார் அதை நீக்கிவிட்டார் என நடிகை ஆண்ட்ரியா விளக்கம் கொடுத்துள்ளார்.

pisasu 2 andrea

சென்னை :நடிகை ஆண்ட்ரியா ஜெர்மியா நடிக்கும் மிஸ்கினின் ‘பிசாசு 2’ படம் குறித்து சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. திரைக்கதையில் நிர்வாணக் காட்சி (nudity) இருந்ததாகவும், அதை ஆண்ட்ரியா ஏற்றுக்கொண்டதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பமும் விமர்சனமும் எழுந்தன.

இதற்கு ஆண்ட்ரியா தெளிவான பதிலளித்துள்ளார். “திரைக்கதையில் ஆரம்பத்தில் அப்படியொரு காட்சி இருந்தது உண்மைதான். ஆனால் படப்பிடிப்பின் போது மிஸ்கின் சார் அதை முழுவதுமாக நீக்கிவிட்டார். படத்தில் கவர்ச்சியான காட்சிகள் (erotic scenes) இருக்கலாம். ஆனால் நிர்வாணக் காட்சிகள் எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், மிஸ்கினின் படைப்பு முறை மற்றும் அவரது நோக்கத்தை முழுமையாக நம்புவதாகவும் தெரிவித்தார்.“மிஸ்கின் சார் உயிர் பிழைப்புக்காக படம் எடுப்பவர் இல்லை. அவர் பல பெரிய நடிகர்களுடன் வெற்றிகரமாகப் பல படங்கள் இயக்கியவர். அப்படிப்பட்ட இயக்குநர் என்னை ஒரு கதாபாத்திரத்திற்காகத் தேர்ந்தெடுத்தால், அவரது பார்வையையும் நோக்கத்தையும் நான் முழுமையாக நம்பியே நடிக்கிறேன்” என்று ஆண்ட்ரியா விளக்கமளித்தார்.

மிஸ்கினின் தைரியமான படைப்பு முறையை ரசிப்பதாகவும், அதனால்தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். இந்த விளக்கத்திற்குப் பிறகு ரசிகர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். ‘பிசாசு 2’ படம் மிஸ்கினின் முந்தைய படங்களைப் போலவே உளவியல் திகில் வகையைச் சேர்ந்தது என்றும், ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் மிக முக்கியமானது என்றும் தெரிகிறது. படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் பண பிரச்சினை காரணமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. ரசிகர்கள் அனைவரும் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து தான் காத்துகொண்டு இருக்கிறார்கள்.