சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை!
மறைந்த பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை : சின்னத்திரையில் கலக்கி கொண்டிருந்த விஜே சித்ரா திடீரென கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து, இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து சித்ராவின் கணவரான ஹேம்நாத்தை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் ஹேம்நாத் கடந்த ஆகஸ்ட் மாதம் விடுதலையும் செய்யப்பட்டார். இந்த சூழலில், சித்ராவின் தந்தை காமராஜ் (64) சென்னை திருவன்மியூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவருடைய உடலை மீட்டுள்ள காவல்துறை வழகுப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகள் சித்ராவின் இழப்பை தாங்க முடியாமல் அந்த நாளில் இருந்து மன உளைச்சலில் காமராஜ் இருந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவருடைய கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்ட நிலையிலும், சித்ராவின் தந்தை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வந்தார்.
இந்த நிலையில், மகள் இறந்த துக்கம் தாங்காமல் அவரும் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, விஜே சித்ரா இறப்புக்கு இன்னும் காரணம் தெரியாத ஒரு சூழல் இருக்கும் நிலையில், திடீரென அவருடைய தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சின்னத்திரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025