தளபதி விஜய்க்கு வில்லனாகும் சியான் விக்ரம்...??

It is rumored that actor Vikram will play Vijay's villain in thalapathy 65.

தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விக்ரம் நடிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் எந்த இயக்குனருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்று கேள்விக்கு பல இயக்குனர்கள் தளபதி 66 படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது தளபதி 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பது கிட்டத்தட்ட உறுதியானதாக தகவல்கள் வெளியானது. அந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதும் உறுதியாகிவிட்டது. அந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விக்ரம் நடிப்பதாக தற்போது தகவல் வைரலாகி வருகிறது.