சென்னை :தமிழ் திரையுலகின் பிரபல நடன இயக்குநர் ராபர்ட் தாயார் நேற்றைய தினம் மரணமடைந்தார். தனது தாயின் இறுதி ஊர்வலத்தில் கண்ணீருடன் நடனமாடி உருக்கமாக பிரியாவிடை கொடுத்தார்.
இந்த சோகமான தருணத்தை அவர் தனது கலையின் மூலம் வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது திரையுலக ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணே கலக்குது, தாயின் இறுதி ஊர்வலத்தில் சோகத்துடன் நடனமாடிய ராபர்ட் மாஸ்டர் #RobertMaster #BehindTalkies pic.twitter.com/VkOy2HBnR6
— Behind Talkies (@BehindTalkies) August 1, 2025
ராபர்ட் மாஸ்டர், பிரபுதேவாவின் நடனக் குழுவில் பணியாற்றியவர் மற்றும் பல வெற்றி பாடல்களுக்கு நடனம் அமைத்தவர். அவரது தாயின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
