கர்ணன் படத்தில் இடம்பெற்ற திரௌபதையின் முத்தம் என்ற மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்திலிருந்து பர்ஸ்ட் லூக் போஸ்டர், முதல் பாடலான கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல், மற்றும் இரண்டாவது பாடலான பண்டாரத்தி புராணம் என இரண்டு பாடல்கள் வெளியாகி யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து வரும் நிலையில், அடுத்ததாக இந்த படத்தில் இடம்பெற்ற திரௌபதையின் முத்தம் என்ற மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. யுகபாரதி எழுதியுள்ள இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.
unknown nodeஇந்த படத்தில் நடிகை ராஜீஷா விஜயன் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.