#CinemaBreaking: சுல்தான் படத்தின் மூன்றாவது சிங்கிள் அப்டேட்..!!

The official announcement is that the song 'Nanga' from the movie 'Sultan' will be released tomorrow at 5.30 pm.

சுல்தான் படத்தில் இடம்பெற்ற எப்படி இருந்த நாங்க என்ற பாடல் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு,லால் , நெப்போலியன், ராமச்சந்திரன் ராஜூ, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கான புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதனை தொடர்ந்து மூன்றாவது சிங்கிள் பாடல் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது அதற்கான அப்டேட்டை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஆம், நாளை மாலை 5.30 மணிக்கு இந்த திரைப்படத்தின் “எப்படி இருந்த நாங்க” என்ற மூன்றாவது பாடல் வெளியாகவுள்ளது.

unknown node