திரைப்படமாகும் டாக்டர்.ராமதாஸின் வாழ்க்கை வரலாறு – இயக்குனர் சேரன் அறிவிப்பு.!

டாக்டர் எஸ். ராமதாஸின் வாழ்க்கை வரலாறு "அய்யா - The Lion of Tamil Nadu" என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது.

The Lion Of TamilNadu

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று தனது 87-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, டாக்டர்.ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயோபிக் படத்தை இயக்குநர் சேரன் இயக்குகிறார், மேலும் இதில் நடிகர் ஆரி அர்ஜுனன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

அய்யா என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் போஸ்டரில், ‘The Lion of TamilNadu’ மற்றும் ‘இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு’ ஆகிய வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தை குறிக்கும் வகையில் ‘1987’ என்பதும் போஸ்டரில் உள்ளது.


இந்தத் திரைப்படம் டாக்டர் ராமதாஸின் இனவிடுதலைப் போராட்டத்தையும், அவரது அரசியல் மற்றும் சமூக பங்களிப்புகளையும் மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனரான ராமதாஸ், வன்னியர் சமூகத்தின் உரிமைகளுக்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மது ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்காகவும் பணியாற்றியவர்.

இந்தப் படம் அவரது வாழ்க்கையையும், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அவரது தாக்கத்தையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.35 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தத் இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான பயோபிக்காக பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்