இதுவே எனது கடைசி தயாரிப்பு – தயாரிப்பில் இருந்து விலகிய வெற்றிமாறன்.!

மனுஷி திரைப் படம் நீதிமன்றத்திற்கு சென்றது மற்றும் Bad girl திரைப் படம் 3 முறை சென்சார் சென்ற நிகழ்வுகளை சுட்டிக் காட்டி இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.

Vetrimaaran

சென்னை :மனுஷி திரைப் படம் நீதிமன்றத்திற்கு சென்றது மற்றும் BAD GIRL திரைப் படம் 3 முறை சென்சார் சென்ற நிகழ்வுகளை சுட்டிக் காட்டி, இயக்குநர் வெற்றிமாறன் ‘Bad Girl’ திரைப்படத்தை தனது கடைசி தயாரிப்பாகக் குறிப்பிட்டு, தனது தயாரிப்பு நிறுவனமான Grass Root Film Company-ஐ மூடுவதாக அறிவித்திருப்பது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, இயக்குனர் வெற்றிமாறன் Bad Girl திரைப்படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், “GRASS ROOT பட தயாரிப்பு நிறுவனத்தின் கடைசி படம் BAD GIRL தான். அதற்குப் பின்னர் இந்த நிறுவனத்தை மூடப் போகிறோம். இயக்குநராக இருப்பது சுதந்திரமானது. ஆனால் அதுவே தயாரிப்பாளராக இருப்பது மிகவும் அழுத்தம் நிறைந்தது. அதனால் இந்த முடிவு எடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.

இந்த முடிவு தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் வணிக அழுத்தங்களை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ‘Bad Girl’ திரைப்படம், வர்ஷா பரத் இயக்கத்தில், வெற்றிமாறனும் அனுராக் காஷ்யப்பும் தயாரித்து வழங்கிய ஒரு வரவயது (coming-of-age drama) நாடகமாகும்.

இது ஏற்கனவே சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஆனால், இதன் டீஸர் வெளியீட்டுக்குப் பிறகு, பிராமண சமூகத்தைப் பற்றிய சித்தரிப்பு தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் மற்றும் சென்சார் பிரச்சினைகள் படத்தின் வணிக வெற்றியை பாதிக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.