மிரள வைக்கும் காங் vs காட்ஸில்லா படத்தின் வசூல் ..??

From the day of its release till now, the movie Kong vs Godzilla has reportedly grossed Rs 700 crore.

வெளியான நாளிலிருந்து தற்போது வரை காங் vs காட்ஸில்லா திரைப்படம் 700 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்.

இயக்குனர் ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் அலெக்சாண்டர்,ஸ்கார்ஸ்கர்ட் , மில்லி, பாபி, பிரவுன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் காங் vs காட்ஸில்லா. இந்த திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்து தற்போது வரை இந்த திரைப்படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

வெளியான நாளில் இருந்து தற்போது வரை இந்த திரைப்படம் உலகம் முழுவது எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை இந்த திரைப்படம் 100 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாக தகவ்கள் வெளியாகியுள்ளது. இந்திய மதிப்பின் படி 700 கோடி வசூல் செய்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் டாம் ஹோல்கன்போர்க் இசையமைக்க ஒளிபதிவாளராக பென் செரெசின் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.