இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், அஜித் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் -விஜய் படங்கள் ஒரே தினத்தில் வெளியானது என்பதால் இரண்டு திரைப்படங்களின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
unknown nodevarisu vs thunivu[Image Source : Twitter ]
இந்த இரண்டு திரைப்படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் லியோ திரைப்படத்திலும் நடிகர் அஜித் தன்னுடைய 62-வது திரைப்படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளனர்.
unknown nodeleo [Image Source : Twitter]
இதில் லியோ படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் தொடங்கவே இல்லை. மேலும் “லியோ” படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் போத படம் தீபாவளி முன்னிட்டு அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விட்டது.
unknown nodeak62 [Image Source: Twitter ]
இந்த நிலையில் வாரிசு, துணிவு படத்தை போல மீண்டும் அஜித் விஜய் படங்கள் ஒரே தினத்தில் மோதவுள்ளதாம். அதன்படி, லியோ படமும் அஜித்தின் 62-வது திரைப்படமும் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளதாக புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் விரைவில் ஏகே 62 படத்திற்கான புதிய அப்டேட் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.