பார்த்திபன் படத்திற்கு இசையமைக்கும் இசைப்புயல்..!!

Composer AR Rahman is composing for the film Shadows of the Night directed by Parthiban

பார்த்திபன் இயக்கும் இரவின் நிழல்கள் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒத்தசெருப்பு என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் செய்தது. மேலும் தேசிய விருதையும் இந்த திரைப்படம் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பார்த்திபன் இரவின் நிழல்கள் என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையப்பயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்திரனாக பங்கேற்ற ரஹ்மான் பார்த்திபன் சாருடன் ஒரு படத்தில் பணியாற்றி வருகிறேன் என்று கூறியுள்ளார். இதனை பார்த்திபன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏஆர்ஆர் வாய் கேட்பது அரிது என்றும் இரவின் நிழல்கள் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருவது பெருமை இதுவரை 3 பாடல்கள் முடிந்துள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.

unknown node