சென்னை :முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’ இன் மூலம் பிரபலமான சனா கான் மீண்டும் தாயாகப் போகிறார். இவர் வேறுயாருமல்ல… சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஜானு தான். இந்த மகிழ்ச்சியான செய்தியை அவரே ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
நடிகை சனா 2021 நவம்பர் 21 அன்று, சூரத்தில் முஃப்தி அனஸ் சையத்தை மணந்தார். 2023 ஜூலை 5 அன்று, சனா தனது முதல் குழந்தையை வரவேற்றார். இப்போது ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
ஆம், இவருக்கு ஏற்கனவே, சையத் தாரிக் ஜமீல் என்கிற ஆண் குழந்தை இருக்கிறது. தற்பொழுது, நடிகை சனா கான் மற்றும் அவரது கணவர் அனஸ் சையத் மீண்டும் பெற்றோர் ஆவதற்கான நல்ல செய்தியை அறிவிப்பதற்காக ஒரு அனிமேஷன் வீடியோவைப் பகிர்ந்து கொண்டனர்.
அந்த வீடியோவில், “அல்லாஹ்வின் ஆசீர்வாதத்துடன், மூன்று பேர் கொண்ட எங்கள் குடும்பம் இப்போது நான்கு ஆகப் போகிறது. அல்லாஹ்வுக்கு நன்றி. ஒரு சிறிய விருந்தினர் வரவிருக்கிறார். சையத் தாரிக் ஜமீல் ஒரு மூத்த சகோதரனாக ஆவதில் உற்சாகமாக இருக்கிறார்.”என்று உற்சாமாக குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
unknown node