அண்ணாத்த படத்தின் அப்டேட் கொடுத்த டி.இமான்..!!

Composer D Iman said in a recent interview that 4 songs for the movie Annatha have been completed.

அண்ணாத்த படத்திற்கான 4 பாடல்கள் முடிந்துவிட்டதாக இசையமைப்பாளர் டி இமான் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மார்ச் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட முதல் அறிவிப்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தில் நடிகர் ஜெகபதி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் சமீபத்தில் படத்தின் இசையமைப்பாளர் டி. இமானிடம் அண்ணாத்த திரைப்படத்தின் அப்டேட் குறித்து கேட்டதற்கு டி.இமான் 4 பாடல்கள் முடிந்துள்ளதாகவும். படத்திற்கான மற்ற வேலைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்ணாத்த படத்தின் அப்டேட் கொடுத்த டி.இமான்..!!