சியான் ரசிகர்களுக்கு மரண மாஸ் அப்டேட்... கோப்ரா எப்போது வெளியாகிறது தெரியுமா..?

It has been reported that the Cobra movie will be released on May 12 ahead of the Ramadan festival.

கோப்ரா படம் மே 12 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படங்களில் ஒன்று கோப்ரா. ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் ஏழு வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் உருவாகும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதனை தொடர்ந்து இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஆம் இந்த படம் வருகின்ற மே 12 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.