தீபாவளி கொண்டாட்டம் : இன்று வெளியாகிறது ரஜினியின் 'அண்ணாத்த' ....!

Rajinikanth starrer 'Annatha' directed by Siva is released today, the festival of Diwali.

தீபாவளி பண்டிகையான இன்று இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் வெளியாகிறது.

இயக்குனர் சிவா அவர்களின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் அண்ணாத்த. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ரஜினியின் தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கான டிரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தீபாவளியை முன்னிட்டு இன்று இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெறும் எனவும் கூறப்படுகிறது.