மீண்டும் மாஸ்டர் படக்குழுவுடன் பணியாற்ற ஆர்வம் – மாளவிகா மோகனன்..!!

Actress Malvika Mohanan has said in a recent interview that she is interested in working with Master Films again.

மீண்டும் மாஸ்டர் படக்குழுவுடன் பணியாற்ற ஆர்வம் உள்ளது என்று நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் விஜய்சேதுபது நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தமிழில் மாளவிகா மோகனுக்கு மாஸ்டர் 2 வது திரைப்படம். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.

இந்த நிலையில் தற்போது நடிகை மாளவிகா மோகன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்” மாஸ்டர் படத்தில் நான் விஜய் சார்  விஜய் சேதுபதி சார் லோகேஷ் கனகராஜ் சார் என்ற மிகச்சிறந்த திறமைசாளிகளுடன் பணிபுரிவது சவாலாக இருந்தது. நான் மீண்டும் மாஸ்டர் படக்குழுவுடன் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன் என்று” கூறியுள்ளார்.