தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள தேவதாஸ் பிரதர்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள தேவதாஸ் பிரதர்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம்  திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டது. தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில், மூடப்பட்ட திரையரங்குகள் அனைத்தும்  50% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து,  திரையரங்குகளில் வெளியிட தயாராகவுள்ள படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் மும்மரம் காட்டி வருகிறார்கள். சில திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று தலைவி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், இயக்குனர் ஜானகிராமன் இயக்கத்தில் எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் கீழ் மதியழகன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தேவதாஸ் பிரதர்ஸ்“. இப்படம் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node

இந்த படத்தில் துருவா, பாலா சரவணன், அஜய் பிரசாத், சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சி. தரண்குமார் இசையமைத்துள்ளார்.