பிரபல நடிகையை விவாகரத்து செய்கிறாரா தனுஷ் பட பிரபலம்.!

Famous Malayalam actress Ann Augustine and cinematographer Jomon John are said to be having an affair.

பிரபல மலையாள நடிகையான ஆன் அகஸ்டின் மற்றும் ஒளிப்பதிவாளரான ஜோமோன் ஜான் ஜோடி விவகாரத்து செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஆன் அகஸ்டின்.இவர் பிரபல மலையாள நடிகரான அகஸ்டினின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு சில படங்களில் மட்டும் நடித்த ஆன் பிரபல ஒளிப்பதிவாளரான ஜோமோன் ஜான் என்பவரை 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் மலையாளத்தில் ‘தட்டத்தின் மரியத்து’, ‘என்னு நிண்டே மொய்தீன்’, ‘சார்லி’, ‘தண்ணீர் மத்தன் தினங்கள்’ உள்ளிட்ட பல படங்களிலும் , தமிழில் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.அது மட்டுமின்றி பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.