திரையில் மிரட்ட காத்திருக்கும் தனுஷின் 'கர்ணன்'.! ரிலீஸ் தேதி ரெடி.!

It has been reported that the Karnan movie starring Dhanush will be released on April 9.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ரெஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டது. அதனை தொடர்ந்து படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் நேற்றைய தினம் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று டீசர் வெளியிட்டு தெரிவித்திருந்தார்கள் .எனவே தற்போது கர்ணன் படம் ஏப்ரலில் எப்போது ரிலீஸாகும் என்ற தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தினை ஏப்ரல் மாதம் 9-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.