மீண்டும் தனுஷ் & மாரி செல்வராஜ் கூட்டணி..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Actor Dhanush is all set to star in a new film directed by director Mari Selvaraj

மீண்டும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 9ஆம் தேதி  வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, பிரியங்கா, சந்திரமௌலி, கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று நல்ல வசூலும் செய்துவருகிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை நடிகர் தனுஷே தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ட்வீட்டில் தனுஷ் கூறியிருப்பது, ” கர்ணனின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, மாரி செல்வராஜும் நானும் மீண்டும் ஒரு முறை கைகோர்க்கிறோம் என்று அறிவிக்க மகிழ்ச்சி. முன் தயாரிப்பு நடக்கிறது,அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளார்கள்.

unknown node