‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பின்னணி இசை பணிகள் தொடங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அறிவித்துள்ளார்.
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு உருவாகி வந்த திரைப்படம் தான் “துருவநட்சத்திரம்”.இந்த திரைப்படத்தில் ராதிகா, சிம்ரன், திவ்யதர்ஷினி , ரித்து வர்மா , பார்த்திபன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
unknown nodeDhruvaNatchathiram [Image Source: Twitter ]
படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சில காரணங்கள் படப்பிடிப்பு அப்டியே நிறுத்திவைக்கப்பட்டது.
unknown nodeDhruvaNatchathiram [Image Source: Twitter ]
அதனை தொடர்ந்து இந்த படத்தின் நிலுவையில் உள்ள பேட்ச் ஒர்க் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் முடிவடைந்தது. இந்த நிலையில், தற்போது படத்திற்கான சூப்பர் அப்டேட் ஒன்றை படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கொடுத்துள்ளார். அது என்னவென்றால், ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பின்னணி இசை பணிகள் தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளார்.
unknown nodeஏற்கனவே, படத்தில் இருந்து வெளியான சில பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் மற்ற பாடல்கள் மீதும் பின்னணி இசை மீதும் பெரிதளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே இந்த திரைப்படம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிற்கு பெரிய கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.