மாஸ்டர் படத்தின் டெலிட்டட் காட்சியில் இதை கவனித்தீர்களா..? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

The video of actress Gauri Kishan crying while laughing at the scene removed from the master film is going very viral on social websites.

மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியில் நடிகை கௌரி கிஷன் அழும்பொழுது சிரிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.அதிலும் மிரட்டலான வில்லனாக விஜய் சேதுபதி நடித்து அசத்தியிருப்பார் .மேலும் இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் அண்மையில் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகி அங்கையும் மக்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்று வருகிறது.

மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் என்றும் , அது அதிகம் என்பதால் பல காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. அந்த வகையில் தற்போது மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்ட ஒரு காட்சியை அமேசான் நேற்று வெளியீட்டனர்.

அந்த வீடியோவில் முக்கியமான கட்சியில் நடிகை கௌரி கிஷன் சிரித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அந்த வீடியோவை மற்றும் கட் செய்து கலாய்த்து வருகிறார்கள். மேலும் சிலர் இந்த காட்சியும் படத்தில் வைத்திருக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.

unknown node