இலவச டிக்கட்டா தருகிறீர்கள்? உங்கள் வேலையை உருப்படியாக பாருங்க! சமுத்திரக்கனிக்கு ப்ளூ சட்டை பதிலடி!

blue sattai maran about Samuthirakani

இயக்குனரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் எப்போதும் பிரபலங்கள் குறித்து விமர்சித்து பதிவுகளை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக ரஜினிகாந்த் மற்றும் ஜெயிலர் வசூலை வைத்து கடுமையாக சமீபத்தில் விமர்சித்து பதிவுகளை வெளியீட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது சமுத்திரக்கனியை விமர்சித்துள்ளார்.

இன்று காலை நடிகர் சமுத்திரக்கனி படத்தை பார்த்துவிட்டு அதனை விமர்சனம் செய்வது ஒருவருடைய தனிப்பட்ட விஷயம் தான். இப்போது இருக்கும் காலங்களில் செல்போன் வைத்திருப்பவர்கள் விமர்சனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு தரமாக படமாக இருந்தால் அது விமர்சனங்களை தாண்டி நன்றாக ஓடும். அதற்கு உதாரணம் போர்த்தொழில் திரைப்படம் ” என்று சமுத்திரக்கனி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அந்த பதிவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ப்ளூ சட்டை மாறன் ” பணம் தனது படம் பார்க்கிறார்கள் எனவே, அதனால் விமர்சனம் செய்கிறார்கள். சொம்பு அடித்து பாராட்ட நீங்கள் இலவச டிக்கட்டா தருகிறீர்கள்? டீக்கடையில் வாங்கும் பத்து ரூபாய் பஜ்ஜி முதல் பல ஆயிரம் மதிப்புள்ள ஆடை வரை குறை இருந்தால் அதனை சுட்டிக்காட்டுவது என்பது  நுகர்வோரின் உரிமை.

படம் சரியாகவில்லை என்றால் படம் பார்த்து நேரம் மற்றும் பணத்தை செலவழிப்பவர் விமர்சிக்காமல் என்ன செய்வார்கள்? கேமரா முன்னால் , டப்பிங் பேச வாய் இருப்பவர்கள் எல்லாம் நடிப்பு பயிற்சியே இல்லாமல் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும்போது தன் உழைப்பில் செல்போன் வாங்கி, தனது பணத்தில் டிக்கட் எடுப்பவர். விமர்சனம் செய்தால் உங்களுக்கு என்ன?

சமூக வலைத்தளத்தில் தனித்து இயங்கி வெளிப்படையாக விமர்சனம் செய்வோர் சிலரை உங்களால் விலைக்கு வாங்கவே முடியாது என்பதால். ஆகவே, இந்த நக்கல் வெங்காயமெல்லாம் வேலைக்கு ஆகாது சார். நீங்கள் உங்கள் வேலையை உருப்படியாக பாருங்கள். மொக்கை படங்கள் தொடர்ந்து விமர்சனங்களில் கிழித்து தொங்க விடப்படும்” எனவும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha