வாத்தி திரைப்படம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை  சம்யுக்த்தா மேனன் நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

unknown node

Vaathi [Image Source : Google ]

தமிழில் “வாத்தி” என்ற பெயரிலும், தெலுங்கில் “சார்” என்ற பெயரிலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. கல்வியை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் பலருக்கும் படம் பிடித்துள்ளது. எனவே படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் திரையங்கிற்கு செல்கிறார்கள்.

unknown node

Vaathi box offfice [Image Source : Google ]

தமிழை விட தெலுங்கில் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்றே கூறலாம். இந்த நிலையில், படம் வெளியான 6 நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதற்கான தகவல்க தற்போது கிடைத்துள்ளது.

unknown node

Vaathi bo [Image Source : Google ]

அதன்படி, வாத்தி திரைப்படம் உலகம் முழுவதும் 67 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், தெலுங்கில் மட்டும் படம் 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.