இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்துள்ளார். இப்படத்திற்கு, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியிட்டு விழா லீலா பேலஸில் வைத்து பிரபலமாக நடைபெற்றது. இந்த விழாவில் மாஸ்டர் படக்குழுவினர், தலப்பாதை விஜயின் பெற்றோர் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இப்படத்தின் மூலம் வெளியான பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளர் அனிருத், மாஸ்டர் படத்தில் மொத்தம் 12 பாடல்கள் உள்ளது. அதில் இன்னும் 8 பாடல்கள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.