விடுதலை படத்திற்காக சூரி,விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி,கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ,சேதன்,கிஷோர் குமார் ஜி ஆகியோர் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி,கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ,சேதன்,கிஷோர் குமார் ஜி ஆகியோர் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இதில் முதல் பாகம் கிட்டத்தட்ட அணைத்து பணிகளும் முடிந்து ரிலீஸ் ஆகா தயாராகவுள்ளது.

unknown node

Viduthalai [Image Source : Twitter]

படத்தின் ட்ரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ட்ரைலரை பார்த்த மக்கள் பலருக்கும் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துவிட்டது என்றே கூறலாம். விடுதலை படம் மார்ச் 30 அல்லது 31-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

viduthalai soori [Image Source : Twitter]

இந்த நிலையில், விடுதலை படத்திற்காக சூரி,விஜய் சேதுபதி  இருவரும் வாங்கியுள்ள சம்பளம் வாங்கியுள்ளார்கள் என்பதற்கான தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, சூரி இந்த படத்தில் நடிப்பதாக கிட்டத்தட்ட 60 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளாராம்.

unknown node

viduthalai vijay sethupathi [Image Source : Twitter]

அவரைப்போல் நடிகர் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக கிட்டத்தட்ட 3-கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இதில் முதலில் சூரிக்கு குறைந்த அளவு சம்பளம் தான் பேசப்பட்டதாவும் தகவல்கள் கசிந்துள்ளது.