அண்ணாத்த படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா..??

It has been reported that there are a total of 6 songs in the movie Annatha.

அண்ணாத்த படத்தில் மொத்தமாக 6 பாடல்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினி ஹைதராபாத்திற்கு சென்றார்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது  திரும்பினார். இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னெவென்றால், அண்ணாத்த திரைப்படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளது என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது அண்ணாத்த படத்தில் மொத்தமாக 6 பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் முதல் பாடலை பாடகர் மறைந்த பாடகர் எஸ்பிபி பாடியுள்ளார்.