ஜகமே தந்திரம் திரைப்படம் எப்போது வெளியாகிறது தெரியுமா..?

Jagame Tantra movie will be released on Netflix ODT on May 1st

ஜகமே தந்திரம் திரைப்படம் வருகின்ற மே 1 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மே 1 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது அதற்கு பிறகு இந்த திரைப்படம் “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜகமே தந்திரம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கி வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகவுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. ஆம் கடந்த ஆண்டு மே 1 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததை தொடர்ந்து அதே போல் வருகின்ற மே 1 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்.