ஓடிடியில் வெளியாகும் கர்ணன்... எப்போது தெரியுமா..??

Announcing the release of Karnan movie on Amazon frame 30 days after its theatrical release

திரையரங்குகளில் வெளியான 30 நாட்கள் கழித்து கர்ணன் திரைப்படம் அமேசான் பிரேமில் வெளியாகும் என்று அறிவிப்பு.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால், ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரேம் வாங்கியுள்ளதாகவும், திரையரங்குகளில் வெளியான 30 நாட்கள் கழித்து இந்த கர்ணன் படம் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.