தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகிறது தெரியுமா..?

விஜய் நடிக்கவுள்ள அவருடைய 68-வது படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் மாதம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Thalapathy68 First look June 22

விஜய் நடிக்கவுள்ள அவருடைய 68-வது படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் மாதம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தளபதி 68

unknown node

Thalapathy68 [Image Source : Twitter/ @MuhilThalaiva]

நடிகர் விஜயின் 68-வது திரைப்படத்தை பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜ இசையமைக்கவுள்ளார். படம் மிகப்பெரிய பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

தளபதி 68 படப்பிடிப்பு..?

unknown node

Thalapathy68 movie [Image Source : Twitter/ @AVinthehousee]

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஆனால், அதற்கு முன்பு அதாவது ஆகஸ்ட் மாதமே தளபதி 68 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தளபதி 68 பர்ஸ்ட் லுக்..?

unknown node

Thalapathy68 [Image Source : Twitter/ @iammoviebuff007]

தளபதி 68 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்போதே தலைப்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனவே, வரும் ஜூன் 22-ஆம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 68 படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அதே நாளில் லியோ படத்தின் அப்டேட்டும் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.