நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிமாக சூர்யா 42 என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.
unknown nodeSuriya42 [Image Source : Google ]
இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் யூவி கிரியேஷன் இரண்டு நிறுவனமும் இணைந்துபிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படம் 10 மொழிக்கு மேல் வெளியாகவுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு படத்தின் அறிவிப்பு டீசர் மட்டுமே வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து படத்தில் இருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்ற காரணத்தால் சூர்யா ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.
unknown nodeSuriya42 movie [Image Source : Google ]
இந்த நிலையில், சூர்யா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சூர்யா 42 படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளது.
unknown nodeSuriya42 Update [Image Source : Google ]
மேலும், மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் அந்த அப்டேட் சூர்யா 42 திரைப்படத்திற்கான தலைப்பாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.