இந்தியன் 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போது முடிவடைகிறது தெரியுமா..?

கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போது முடிவடையும் என்பதற்கான தகவல் தற்போது கசிந்துள்ளது.

கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போது முடிவடையும் என்பதற்கான தகவல் தற்போது கசிந்துள்ளது.

இந்தியன் 2

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

unknown node

Indian 2 [Image Source : Twitter]

இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், குரு சோமசுந்தரம், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், தீபா சங்கர், குல்ஷன் குரோவர், பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், சமுத்திரக்கனி, ஜெய பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது நிறைவடையும்..?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விட்டது. பிறகு நடந்த கிரேன் விபத்து காரணமாக படப்பிடிப்பு தற்காலிமாக நிறுத்தப்பட்டு பிறகு இறுதியாக கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு தற்போது விறு விறுப்பாக வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது.

unknown node

Indian 2 [Image Source : Twitter]

இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போது முடியும் என்பதற்கான தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தான் முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் வரை கமல்ஹாசன் தமிழகத்தில் இருக்கமாட்டாராம். ஏனென்றால் இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் வெளிநாடுகளில் தான் நடைபெறவுள்ளதாம். தென் ஆப்ரிக்கா பகுதிகளில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்த பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்கப்படுகிறது.