சம்பவம் இருக்கு கண்ணா... "அண்ணாத்த" திரைப்படத்தின் டீசர் எப்போது தெரியுமா..?

It has been reported that the teaser for Rajinikanth's movie Annatha is likely to be released on April 14, the Tamil New Year.

ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திற்கான டீசர் வருகின்ற ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதற்க்கு பிறகு பாதியில் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. அதன் பிறகு படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் ஏன்னு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் 25 ஆம் தேதி இந்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.

இந்த நிலையில் இதனை தொடர்ந்த தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு, இந்த மாதம் இறுதி அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் சுமார் ஒரு மாதம் நடைபெறும் படப்பிடிப்பில் நடிகர் ரஜினி கலந்துகொள்ளவுள்ளார். மேலும் இந்த படத்திற்கான டீசர் வருகின்ற ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.