வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகிறது தெரியுமா..??

The first look poster of the movie valimai is reported to be released on the 23rd

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற 23 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கான படப்பிடிப்பு 10 நாட்கள் மீதமுள்ள நிலையில், அந்த படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் வலிமை படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் விரைவில் என்று அறிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து அப்டேட்க்காக காத்துள்ளார்கள்.

இந்த நிலையில் தற்போது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், ஒரு அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. ஆம் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற 23 ஆம் தேதி வெளியாகும் என்றும் அதைபோல் படத்திற்கான ரிலீஸ் தேதியும் அன்றே வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.