விக்ரமின் 'கோப்ரா' படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா.?

Filming for Cobra, directed by Ajay Gyanamuthu and starring Vikram, is set to begin in March.

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் உருவாகும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தது .அதனை தொடர்ந்து 10 நாட்கள் சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பை தொடர்ந்து விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் .

அதன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் கோப்ரா படப்பிடிப்பில் விக்ரம் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது . கோப்ரா படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் 32 நாட்கள் உள்ளதாகவும் ,அதனை ரஷ்யாவில் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.