வலிமை படத்தின் ஓப்பனிங் பாடலை பாடியது யார் தெரியுமா..?

It has been reported that composer and singer Anirudh has sung the first song of the movie Valimai starring Ajith.

அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் மற்றும் பாடகரான அனிருத் படியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா வில்லனாகவும், அம்மாவாக நடிகை சுமித்ராவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யோகி பாபு,பேர்லி மன்னி,குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் முடிவடையும் என்றும் , ஒரு ஸ்டண்ட் காட்சி மட்டும் படமாக்கப்பட உள்ளதாகவும்,விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவுள்ளதாகவும், படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்துள்ளதாகவும் போனி கபூர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வலிமை படத்தின் முதல் பாடல் முடித்துள்ளதாகவும் அந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளதாகவும், இந்த பாடலுக்காக ஒரிசாவில் ட்ரம்ஸ் வாசிக்கும் கலைஞர்களை பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது அந்த பாடலை இசையமைப்பாளர் மற்றும் பாடகரான அனிருத் படியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.