வலிமை படத்தின் ஓப்பனிங் பாடலை பாடியவர் யார் தெரியுமா..?

It has been reported that Yuvan Shankar Raja has sung the opening song of the upcoming movie Valimai directed by H. Vinod and starring Ajith Kumar.

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் ஓப்பனிங் பாடலை யுவன் ஷங்கர் ராஜா படியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு 1 வருடங்களுக்கு மேல் ஆகியும் படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை இதனால் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்டு வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான ஹைதராபாத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இன்னும் 5 நாட்களில் வலிமை திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விடும் அதன் பிறகு வலிமை படத்திலிருந்து அப்டேட் வரிசையாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது அது என்னவென்றால் வலிமை படத்தின் ஓப்பனிங் பாடலை யுவன் ஷங்கர் ராஜா படியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.