வதந்திகளை நம்ப வேண்டாம்.! விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து இயக்குநர் சுசீந்திரன் தகவல்.!

இசையமைப்பாளரும்,நடிகருமான, விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள

இசையமைப்பாளரும்,நடிகருமான, விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள  கடற்கரையில் விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு விபத்து ஏற்பட்டது.

எப்படி விபத்து ஏற்பட்டது என்பதற்கான எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை. படகில் விபத்து நடந்ததாக சொல்கிறார்கள். ஆனால் விபத்து நடந்த செய்தி மட்டும் வெளியேவந்து.  விபத்து ஏற்பட்டதையடுத்து, விஜய் ஆண்டனி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பிறகு அவருக்கு பற்களில் பலத்த அடிபட்டது என்பதால் நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், அதனை தொடர்ந்து இன்று 2-வதாக மீண்டும் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் வதந்தி தகவல் பரவியது.  இதனை தொடர்ந்து, பிரபல இயக்குனரான சுசீந்திரன் விஜய் ஆண்டனி உடல் நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியீட்டு வதந்தி தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ” பிச்சைக்காரன்-2  படப்பிடிப்பில் விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி சார் கடந்த 2 நாட்களுக்கு முன்பே சென்னையில் உள்ள அவருடைய வீட்டிற்கு வந்துவிட்டார். மருத்துவர்கள் அவரை 2 வாரம் தொடர்ந்து ஓய்வு எடுக்க கூறியிருக்கிறார்கள். கூடிய சீக்கிரம் ரசிகர்கிட்ட வீடியோ மூலமாக உங்களிடம் பேசுவார். ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம், சார் பற்றின தவறான வதந்திகளை வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

unknown node