நடிகை சமந்தா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் சில புகைப்படங்களை வெளியீட்டு எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். ஆனால் கிட்டத்தட்ட சில நாட்களாகவே அவர் தன்னுடைய எந்த புகைப்படங்களையும் வெளியிடாமலே இருக்கிறார்.
unknown nodeஇதனால் சமந்தாவுக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் தான் அவர் சமீப காலமாக வெளியே வரவில்லை எனவும் ஸ்கின் அலர்ஜியை சரி செய்ய அவர் சிகிச்சைகாக வெளிநாடு செல்லவுள்ளதாகவும் வதந்தி தகவல்கள் பரவியது.
இதையும் படியுங்களேன்-இன்னும் கொஞ்சம் நெருங்கி இருந்தா போஸ்டர் வேற லெவல்.! பேச்சிலர் நாயகியின் அடுத்த ஆட்டம்…
unknown nodeஇந்த செய்தி உண்மையா அல்லது வதந்தியா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், சமந்தாவின் மேலாளர் மகேந்திரா நேற்று ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் சமந்தாவுக்கு எந்த ஒரு கோளாறும் இல்லை..சமந்தாவின் உடல்நிலை நலமுடன் இருப்பதாகவும், ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
unknown nodeசமந்தா தற்போது, விஜய் தேவரா கொண்டாவிற்கு ஜோடியாக “குஷி ” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் ‘சாகுந்தலம்’, ‘யசோதா’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.