90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என இரண்டிலும் கலக்கி வந்தவர் நடிகர் பொன்னம்பலம். பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிலும் சில நாட்களிலே வெளியேற்றப்பட்டார்.
unknown nodePonnambalam [Image Source : Google ]
இதற்கிடையில், பொன்னம்பலம் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னை பாய்சன் கொடுத்து கொலை செய்ய பார்த்ததாக அதிர்ச்சியான தகவல் ஒன்றை கூறியுள்ளார். இது குறித்து பேசிய ” என்னுடைய அப்பாவுக்கு 4 மனைவிகள். அதில், 3வது மனைவியின் மகன், என்னுடைய அண்ணனை மேனேஜராக வைத்திருந்தேன்.
unknown nodeponnambalam [Image Source : Google ]
ஆனால், அவர் ஒரு கட்டத்தில் எனக்கு ஸ்லோ பாய்சனை உணவில் கலந்து கொடுத்தது தெரியவந்தது. அவரைவிட, நான் நன்றாக வளர்ந்ததே இதற்கு காரணம். ஆனால், அவரை மன்னித்து சேர்த்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.
unknown nodeponnambalam [Image Source : Google ]
மேலும், பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் பொன்னம்பலம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார் என்றே கூறலாம்.பிறகு கடந்த 5 ஆண்டுகளாக பொன்னம்பலம்சிறுநீரகங்கள் செயலிழந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக்காக பல நடிகர்கள் பணம் கொடுத்து உதவி செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.