இசையமைப்பாளராக ஒரு காலத்தில் கலக்கிக்கொண்டிருந்த விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கலக்கி வருகிறார். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது தனக்கு தோன்றும் கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவார்.
unknown nodeஅந்த வகையில் தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் “உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க” என்று பதிவிட்டுள்ளார்.
unknown nodeஅவர் வெளியிட்டுள்ள அந்த பதிவுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் “உண்மை…உண்மை சார் ” எனவும் “மனுசன் ரொம்ப பட்டு இருக்காரு போல உங்களுக்கு என்னாச்சு..? ” எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்-தங்கச்சி மேல அவளோ பாசம்… ஜெயராமின் சேட்டைகள் குறித்து ரகசியம் உடைத்த சகோதரி.!
unknown nodeவிஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2,கோலை,ரதம்,மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள காக்கி திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
unknown node