என் கணவரை பற்றி பேச உனக்கு கூச்சமில்லையா? நடிகர் விஷாலை விளாசிய சரத்குமாரின் மனைவி!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் சரத்குமாரை விமர்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, சரகுமாரின் மகள் வரலக்ஷ்மி, இதற்க்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில், அவரின் மனைவி ராதிகா, ” நடிகர் சங்கத்திற்கு சரத்குமார் எதையும் செய்யவில்லை என பழைய பல்லவியையே விஷால் பாடி வருவதாகவும், நீங்கள் கூறிய குற்றசாட்டுகளை இதுவரை நிரூபித்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், முதுகில் 1000 அழுக்கு முட்டைகள் இருக்கும் போது, என் கணவரை பற்றி பேச உனக்கு கூச்சமில்லையா? என கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025