ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் டாக்டர்..??

It has been reported that the movie Doctor starring Sivakarthikeyan will be released on Amazon Frame

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், இந்த திரைப்படம் கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

இதனால் மீண்டும் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மே 12 ரம்ஜான் தினத்தினை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா 2 அலையின் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தால் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் டாக்டர் திரைப்படம் அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் டாக்டர்..??