கனவுகள் நினைவாகி விட்டது...கமல்ஹாசனுடன் இணைந்த சிம்பு.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய "ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் " மூலம் படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை 55 திரைப்படங்களை தயாரித்துள்ள நிலையில், அடுத்ததாக அவர்

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய “ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ” மூலம் படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை 55 திரைப்படங்களை தயாரித்துள்ள நிலையில், அடுத்ததாக அவர் தயாரிக்கவுள்ள 56-வது படத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

unknown node

BLOODandBATTLE [Image Source : Twitter]

அதனை தொடர்ந்து தற்போது, அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி  சிம்புவின் 48-வது திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை கண்ணனும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரிய சாமி தான் இயக்குகிறார்.

unknown node

கமல்ஹாசனுடன் இணைந்தது குறித்து சிம்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் “கனவுகள் நினைவாகியது” என பதிவிட்டுள்ளார். மேலும் கமல்ஹாசனும் சிம்புவும் ஒரு திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள் என்பதால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் உள்ளனர்.

unknown node

str pathu thala[Image Source : Google ]

சிம்புவின் 48-வது படத்திற்கு யார் இசையமைக்கிறார் என்பது அறிவிக்கப்படவில்லை. விரைவில் அந்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.