ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த "டாக்டர்" பட டிரைலர் வெளியீடு.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடபட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடபட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தை KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் சிவகார்த்தி கேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இனைந்து தயாரிக்கின்றார்கள்.

unknown node

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். வினை ராய் மற்றும் மிலிந்த் சோமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யோகி பாபு, அர்ச்சனா சந்தோக், தீபா சங்கர் ஆகியோர் துணை நடிகர்களாக உள்ளனர்.

unknown node

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், படத்தின் அடுத்த அப்டேட்டாக டிரைலர் சன்டிவி யூடியூப் சேனலில் வெளியீட்டுள்ளது.

unknown nodeunknown node

டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியுள்ளது. மேலும், டாக்டர் படம் அக்டோபர் 9 ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.