பரோட்டாவுக்காக தற்கொலை செய்த பிரபல நடிகை.? வெளியான அதிர்ச்சி தகவல்.!!

ஒடிசாவைச் சேர்ந்த நடிகையும் , பாடகியுமான ருச்சிஸ்மிதா கடந்த  ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய உடல் பலங்கிர் மாவட்டத்தில் உள்ள அவரது

ஒடிசாவைச் சேர்ந்த நடிகையும் , பாடகியுமான ருச்சிஸ்மிதா கடந்த  ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய உடல் பலங்கிர் மாவட்டத்தில் உள்ள அவரது மாமாவின் வீட்டிற்குள் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.

இந்த துயர சம்பவம் குறித்து குடும்பத்தினர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது மர்ம மரணம் குறித்து பாலங்கிர் போலீசார் தற்போது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது அவருடைய மரணத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், தற்கொலைக்கு முன் தாயாருடன் பரோட்டா செய்வது தொடர்பாக ருச்சிஸ்மிதா சண்டையிட்டுள்ளார்.

கடந்த ஞாயிறு இரவு பரோட்டா செய்ய தாமதமாகும் என்று கூறியதால் சண்டை ஏற்பட்டதாக நடிகையின் தாயார் கூறியுள்ளார். மேலும், போலீசார் இது சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.