பிரபல இந்திய நடிகர் அனுபம் ஷியாம் உறுப்பு செயலிழப்பால் காலமானார்...!

Famous Indian actor Anupam Shyam died last night due to organ failure.

பிரபல இந்திய நடிகர் அனுபம் ஷியாம் உறுப்பு செயலிழப்பு காரணமாக நேற்றிரவு மரணமடைந்துள்ளார்.

இந்தியாவின் மிக பிரபலமான நடிகர் தான் அனுபம் ஷியாம். இவர் முதல்வன் படத்தின் இந்தி ரீமேக் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த எதிர்மறையான கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகருக்கான இந்தியன் டெலி விருது பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதமே இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின் இவருக்கு அங்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சில நடிகர்கள் உதவியதாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது அவரது சிறுநீரகத்தில் தொற்று இருந்ததாகவும்,  மீண்டும் ஒரு முறை டயாலிசிஸ் செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது. அதன் பின் இவர் குணமடைய தொடங்கியுள்ளார். ஆனால், நேற்றிரவு இவர் உடல் உள்ளுறுப்பு செயலிழப்பால் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து அவரது நண்பர் யஷ்பால் சர்மா அவர்கள் கூறுகையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பதாக இவர் உடல் உள்ளுறுப்பு செயலிழப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அனுபம் ஷியாம் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல இந்திய நடிகர் அனுபம் ஷியாம் உறுப்பு செயலிழப்பால் காலமானார்...!