இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
unknown nodeஇந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.எஸ்.ஜே.சூர்யா, சூரி, சிவாங்கி போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
unknown nodeஇந்த திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி உலகம் முழுவது உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் உள்ளதால் படக்குழு தீவிரமாக ப்ரோமோஷன் பணியில் இறங்கியுள்ளது.
unknown nodeஇந்நிலையில், டான் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது படத்தின் டிரெய்லர் வெளியீடபட்டுள்ளது. டிரெய்லர் பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
unknown node