SAC-Vijay: அப்பாவுக்கு அறுவை சிகிச்சை! US-லிருந்து வீடு திரும்பிய தளபதி விஜய் நலம் விசாரிப்பு...

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற தளபதி விஜய் 'தளபதி 68' படத்திற்கான வேலைகளை முடித்துவிட்டு, சென்னை திரும்பிய நிலையில், சமீபத்தில் அறுவை சிசிச்சை செய்துகொண்ட

Thalapathy Vijay

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற தளபதி விஜய் ‘தளபதி 68’ படத்திற்கான வேலைகளை முடித்துவிட்டு, சென்னை திரும்பிய நிலையில், சமீபத்தில் அறுவை சிசிச்சை செய்துகொண்ட தனது தந்தையை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

தற்போது, விஜய், தனது அப்பாவை சந்தித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அண்மைக்காலமாக விஜய், தனது தந்தையுடன் பேசாமல் இருந்த நிலையில் தற்போது நேரில் சந்தித்துள்ளார். இந்நிலையில், விஜய் அம்மா மற்றும் அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது ரசிகர் இணையத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

எஸ்.ஏ.சந்திரசேகர், தனது மகன் மற்றும் மனைவி சோபாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டு, “உறவும் பாசமும் மனித மனதின் அமுதம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், தந்தை-மகன் இருவரின் உறவில் விரிசல் ஏற்பட்டதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

unknown node

இதற்கிடையில், விஜய் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோவின் படப்பிடிப்பை முடித்தார், இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார்.