சர்தார்-2 படப்பிடிப்பில் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்த சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குனர் மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம்

Sardar-2 - Fighting coach

சென்னை :இயக்குனர் மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘சர்தார்’. வாட்டர் மாஃபியாக்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில், கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

இதன் 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில்,  சமீபத்தில், இந்த படத்தில் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்தது. இதன் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமம் அருகே பிரசாத் ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், படப்பிடிப்பின்போது எந்த வித உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை, 20 உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்தை யடுத்து, அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிழந்தார் என கூறப்படுகிறது.

20அடி  உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில், மார்பு பகுதியில் காயமடைந்து நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.